தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில்அதிபர்கள் என 18 பேர்கள் உள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் மகராஷ்டிரா, டில்லி, உ.பி., மாநிலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புலனாய்வுத்துறை அதிகாரிகள் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளால் மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தின் முடிவில் தீவிரவாதிகளின் ஹிட்லிஸ்ட்டில் உள்ள பிரபலங்களின் பெயர்களை வெளியிட மறுத்தனர். இருப்பினும் சினிமா நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான். சல்மான்கான், அமீர்கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மும்பையை மையமாக கொண்ட இரண்டு தொழில் அதிபர்களும், புனே நகரை சேர்ந்த மூன்று தொழில் அதிபர்களும் ஹட் லிஸ்ட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.,தலைவர் அத்வானிக்கும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment