''தேசத்தின் குரல்'' அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும்!- பிரித்தானியாவில்..


"தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு லண்டன் Northwick Park மருத்துவமனைக்கு அண்மையில் WATFORD ROAD, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY HALL" இல் "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறும், தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு, மற்றும் சர்வதேசத்துடனான தமிழ் அமைப்புக்களின் அணுகுமுறைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்ர்களின் விடுதலைக்காக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரல்கொடுத்து வந்த "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய அரசியற் பணியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமிழீழ தேசம் தவித்துவரும் இக் காலகட்டதில் அவரின் நினைவு நாளில் புத்திஜீவிகள், அரசியல் திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அடங்கிய குழுவாக சமகால அரசியல் நிலவரம், மற்றும் தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு, சர்வதேசத்துடனான தமிழ் அமைப்புக்களின் அணுகுமுறை, என்பன தொடர்பான ஒரு "அரசியல் ஆய்வரங்கம்" நடைபெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், அரசியல் ஆசானாகவும், உலகப்பரப் பெங்கும் எமது அரசியல் குரலாக வாழ்ந்தவரும், , தத்துவ ஞானியாக தமிழீழ வரலாற்றில் தடம் பதித்து 14.12.2006 அன்று எம்மை விட்டுப் பிரிந்து சென்ற கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் "தேசத்தின் குரல்" எனும் மதிப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலம்: 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை
இடம்: "WESTMINISTER UNIVERCITY"   Watford Road, Harrow, Middlesex, HA1 3TP

நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|