இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வது இலங்கை மக்களுக்கான நியாயமான தேவை மட்டுமல்ல...
..அது சுதந்திரமான ஜனநாயகத்தை உலகெங்கும் முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கும் தேவையான ஒரு கொள்கை யுமாகும் என அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் கிரிம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் றோல் கோல் பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போர் முடிபுக்கு வந்துள்ள நிலையில் அந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. ஒரு திறந்த கொள்கையுடைய ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட காத்திரமான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. இலங்கையில் இடம்பெற்ற போர் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களையும் வாழ்வாதார இழப்புக்களையும் இலட்சக் கணக்கான மக்களின் இடப்பெயர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போர் முடிபடைந்து இரண்டரை வருடங்கள் கழிந்த பின்னரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜக்வால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பம் இரக்கமற்ற வகையில் வீணடிக்கப்பட்டு வருவதாக நான் கவலைப்படுகிறேன். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை மோசமாக்கி வருகின்றார். இதில் முக்கியமாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான தமிழ் மக் கள் கொல்லப்பட்டதை மூடிமறைக்க மகிந்த ராஜபக் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள்அமைகின்றன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எவரையும் பொறுப்பேற்க வைக்கும் அதிகாரத் தை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக் குழு கொண்டிருக்கவில்லை. சீனா, பாகிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளே சர்வதேச தலையீட்டிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு பாதுகாப்பு வழங்க முன்வந்திருக்கின்றன. இந்நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் காணப்படும் நிலையிலேயே, இத்தகைய நாடுகளிடம் அரசாங்கம் ஆதரவைத் தேடுகின்றது. இலங்கையில் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தக்கூடிய கொள்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதை பார்த்துக் கொண்டு மக்கள் சபை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்கக் கூடாது என்று உலகின் சிறந்த ஜனநாயக நாட்டின் பிரதிநிதி என்ற அளவில் நான் கோரிக்கைவிடுகின்றேன். இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர் பில் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வது இலங்கை மக்களுக்கான நியாயமான தேவை மட்டுமல்ல, அது சுதந்திரமான ஜனநாயகத்தை உலகெங்கும் முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கும் தேவையாள ஒரு கொள்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment