விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பை கலைக்க ஈபிடிபி முயற்சி?


தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் தூய தமிழில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பினை கலைக்க ஈபிடிபி முயற்சி செய்து வருகின்றது.கிளிநொச்சியில் உள்ள தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச்சங்கங்களின் பேரிணையத்தினையே கலைத்துவிட ஈ.பி.டி.பியினரும், ஆளுநரும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்த காலத்தின் போது, பனை தென்னை வள அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக வடமாகாண பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்களின் பேரிணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள பனை தென்னை வளக் கூட்டுறவு அமைப்புகள் இந்தப் பேரிணையத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தன. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கத்தவர்களின் நலனுக்காக குறித்த பேரிணையம் ஏராளமான இடர்களைச் சுமந்து, பணியாற்றி வந்தது. எனினும்  புலிகளை ஞாபகப்படுத்தும் வகையில் , ‘பேரிணையம்’ என்ற பெயரை இந்த அமைப்புக் கொண்டிருப்பதால், ஈ.பி.டி.பியினரும், ஆளுநரும் இந்தச் சங்கத்தை இல்லாதொழிக்க தற்போது முனைப்புக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.
.
போர் முடிவுற்ற பின்னர் புலிகளை ஞாபகமூட்டும் சின்னங்கள், நினைவிடங்கள், துயிலுமில்லங்கள் என்பவற்றை அழிப்பதில் படைத்தரப்பு தீவிரம் காட்டிவருகின்றது. இதனடிப்படையில் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே சிறப்பாகச் செயற்பட்டு வரும் பேரிணையத்தை கலைத்து இதனை மாவட்ட சமாசத்துடன் இணைக்க திரைமறைவு வேலைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

.
இதேவேளை-
கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளில் தமது கட்சி சார்பான நபர்களை சட்டவிரோதமான முறையில் உள்நுழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்துக்காக , அந்த மாவட்டத்தின் கூட்டுறவு உதவி ஆணையாளராக இருந்த கணேஸ் , பழிவாங்குமுகமாக இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி ஈழநாதம்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|