அமெரிக்க விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான் !

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஈரான் அணு திட்டத்தை பலப்படுத்தி வருகிறது. மின்சார தேவைக்காக இதை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்கவே அவை பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. 


இதைத் தொடர்ந்து இங்கிலாந்து ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் மக்கள் இங்கிலாந்து தூதரகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்து இங்கிலாந்து தூதரகம் காலி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரானின் மற்றொரு எதிரி நாடான அமெரிக்காவின் ஆளில்லாமல் பறக்கும் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆர்.கியூ.170 ரக அதிதொழில் நுட்பம் வாய்ந்த அந்த விமானம் ஈரானின் விமானப்படை தளத்தை வானில் பறந்து உளவு பார்த்ததாக தெரிகிறது.


அதை கண்டுபிடித்த ஈரான் ராணுவம் கிழக்கு எல்லையில் அந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் அந்த விமானம் சிறிய அளவில் சேதம் அடைந்தது. தற்போது அது ஈரான் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தகவலை ஈரான்  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ஆனால் தமது விமானம் எதனையும் ஈரான் சுட்டு விழுத்தவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|