இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா இராணுவத் தளம் ஒன்றை அமைக்க இருப்பதாக அரசல் புரசலாக பல செய்திகள் வெளியானது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இதனை இந்தியா ஒரு பெரும் விடையமாக எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒரு கட்டுக்கதை போன்ற தோற்றப்பாட்டையே அது வெளியிட்டும் வந்தது. இலங்கையில் இருந்து சுமார் 6,000 மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்க கண்டம் ஆரம்பமாகும் இடத்தில் மடகஸ்கார் என்னும் தீவு உள்ளது. அதற்கு அருகாமையில் உள்ள சே-ஷல் என்னும் தீவில் சீனா தனது இராணுவத்தளத்தை அமைக்கவிருக்கிறது என்ற செய்தி தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்டமாக சீனா தனது கடற்படைத் தளத்தை அங்கே நிறுவ முயற்சிகளை மேற்கொள்கிறது என அறியப்படுகிறது. அருகில் இருக்கும் சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அதிர்கரித்துள்ளனர்.
அவர்கள் இந்துசமுத்திரத்தில் பல பகுதிகளில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே. அவ்வழியால் செல்லும் பல வர்த்தக கப்பல்களை அவர்கள் கடத்துவதும் கப்பம் கோருவதும் நாளாந்தம் நடக்கும் செயலாக மாறிவிட்டது. இதனைத் தடுக்கும் நோக்கில் தமது நாட்டிற்கு உதவுமாறு சே-ஷல் நாட்டு வெளிநாட்டு அமைச்சர் சீனாவிடம் கோரிக்கை விடுத்தார். அதுதான் சான்ஸ் என சீனா உடனே அங்கே கடற்படைத் தளத்தை நிறுவ பிளானைப் போட்டுவிட்டது. சே-ஷல் நாட்டைல் இந்திய வம்சாவழி மக்கள் அதிலும் குறிப்பாக பல தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அந் நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் ஆவர். அத்தோடு அந் நாட்டில் சிறிய அளவில் சீனர்களும் வசிக்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட சே-ஷல் நாட்டில் பல தீவுகள் மனிதர் வாழ ஏற்ற தீவுகளாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சே-ஷல் தீவுகளில் சீனா அமைக்கவிருக்கும் இராணுவத் தளமானது சீனாவின் முதலாவது இந்து சமுத்திர இராணுவத் தளமாகும் என்பது குறிபிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அந்தமான் நிக்கோபர் தீவுகளை நோட்டம் விட்டது. இதனை அவதானித்த இந்தியக் கடற்படையினர் அவ்விடத்தை நெருங்கிய வேளை அது இலங்கை கடற்பரப்புக்குள் நுளைந்து தப்பித்தது. பின்னர் அது இலங்கை அரசின் அனுமதியுடன் அங்கே தங்கி சில நாட்கள் கழித்து மடகஸ்கார் பக்கமாகச் சென்றது என்ற செய்திகளும் ஏற்கனவே வெளியாகியிருந்தது. தற்போது சீனாவின் அதி உச்ச இராணுவத் தளபதிகள் சிலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை அரசு பாதுகாத்து பின்னர் அனுப்பியதற்காக சீனா நன்றி தெரிவிப்பதற்காகவே தனது உயர் அதிகாரிகளை அனுப்பிவைத்ததாக கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறாயினும் சே-ஷல் நாட்டில் சீனா பாரிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கும் வேலையை ஆரம்பிக்க இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு என்ன பங்கம் இருக்கிறது என்பதும். சீன நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் இருக்கும் தரையை ஏன் படம்பிடித்துச் சென்றது என்பது தொடர்பாகவும் இந்தியா அராயாமல் விடும் பட்சத்தில் அந் நாட்டிற்கான ஆபத்துகள் அதிகரித்துச் செல்லும் வாய்ப்புகள் காணப்படுவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சீனா அமைக்கும் இராணுவத் தளத்திற்கு இலங்கை எவ்வாற உதவிகளைச் செய்யவுள்ளது என்பது தொடர்பாகவும் சீன உயர் அதிகாரிகள் இலங்கையில் ஆராய்ந்துள்ளனர் என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததால் இலங்கை அரசானது சீனாவுடன் நெருங்கிய நட்புறவினைப் பேணிவருகிறது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது. இதில் இந்தியாவின் நிலை பெரும் நெருக்கடியாக உள்ளது என்பது இனிவருங் காலங்களில் வெளிச்சத்துக்கு வரும் செய்திகளில் ஒன்றாக அமையலாம்.
நன்றி-அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment