அறிக்கையினை ஏற்கமுடியாது: சர்வதேச விசாரணை அவசியம்: மனித உரிமை அமைப்புக்கள்.


மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு ‘ஒருபக்கச் சார்பானது என்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் அக்கறைசெலுத்தத் தவறுகிறது என்றும்’ ஏற்கனவே தமக்கிருந்த அச்சத்தை இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் சாம் சரீஃபீ சுட்டிக்காட்டினார்.  இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் அடுத்த அமர்வின்போது இலங்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார். 
.
´சர்வதேச விசாரணை தேவை´ 
.
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஐசிஜி என்கின்ற சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதை நிராகரித்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இந்த அறிக்கையில் புதிய விடயங்கள் எதுவும் இல்லையென்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றது.  போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகளை இலங்கை அரசின் இந்த ஆணைக்குழு கண்டறிய வேண்டும் என்பதற்காக கடந்த 18 மாதங்களாக ஐநாவும் உலக நாடுகளும் காத்திருந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய விவகாரங்களுக்கான இயக்குநர் ப்ராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 
.
ஆணைக்குழுவின் இந்த இயலாமைகளும் தவறுதலுகளுமே சர்வதேச விசாரணையொன்றுக்கான தேவையை வலியுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த அறிக்கையை ‘ஒரு பூசி மெழுகும் செயல்’ என்று இலங்கை தொடர்பில் பிரிட்டனிலிருந்து இயங்கும் சமாதானத்திற்கும் நீதிக்குமான அமைப்பு வர்ணித்துள்ளது. 

நன்றி ஈழநாதம்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|