தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சண்டையில் சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர்-நைஜீரியாவில் சம்பவம்.


நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சண்டையில் சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியை சேர்ந்தது. டமாடரு என்னும் நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. டாமடருவில் உள்ள மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயம், காவல்நிலையம் ஆகியவற்றின் முன்பு இந்த தாக்குதல்நடைபெற்றது. இச்சம்பவத்திற்கு போகோஹாரம் இஸ்லாமிஸ்ட் என்னும் தீவிரவாத அமைப்பு பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.டாமடரு நகருக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட துவங்கினர்.

நேற்று வெள்ளிக்கிழமையாதலால் பிரார்த்தனை நடத்துவதற்காக மக்கள் அதிகளவில் கூடியுள்ள நேரத்தில் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரித்து என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல்நடைபெற்ற போது தீவிரவாதிகளை எதிர்கொள்ள போதுமான போலீசார் இல்லை என சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் தாக்குதலுக்கு பின்னர் டாமடரு நகரம் பாலைவனம் போன்று வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவித்தனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|