முடிந்தால் கைது செய்யுங்கள்! அரியநேந்திரன் எம்.பி அரசிற்கு சவால்.


இலங்கை அரசாங்கத்திற்கு முடியுமென்றால் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்து பார்கட்டும் அப்படி கைது செய்வார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்குத்தான் வெற்றியாக இருக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை வரும் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் குறித்தும் பேச்சுவார்த்தை குறித்தும் கருத்துக்களை வெளியிடும் கெலஉறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள்; அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

நாங்கள் கூறுகின்றோம் முடிந்தால் இலங்கை அரசாங்கம் அவர்களை கைது செய்து பார்க்கட்டும் அப்படி கைது செய்வார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களுக்கே வெளிநாடு சென்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியாது என்றால் சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் எனவே கைது செய்ய வேண்டும் என்ற பூச்சாண்டி வார்த்தைக்கெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயப்படாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்துப் பேசுவதற்கு காரணமே இலங்கை அரசாங்கம் தான். இன்று வரை போன பஸ்சிற்கு கையைக்காட்டும் நிலையில்தான் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்பதை அரசாங்கம் முதலில் ஆராய வேண்டும். கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டம் உருவாகுவதற்கும் காரணம் இந்த அரசாங்கம்தான் தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டத்தை அப்போதே ஏற்றுக்கொண்டு தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைத்திருந்தால் அதன் பின் ஒரு ஆயுதப்போராட்டம் ஏற்பட்டிருக்கப் போவதும் இல்லை தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொள்ளப்பட்டிருக்கத் தேவையும் இல்லை அமெரிக்கா போன்ற நாடுகள் எங்களை அழைத்திருக்கவும் தேவையில்லை. அரசுடன் நடந்த கடந்த 12சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் தரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் மிகுந்த இதயசுத்தியுடன் கலந்துகொண்டோம் ஆனால் தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது இதன் காரணமாகத்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இலங்கையில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட தமிழர்களுக்கான கட்சியென்ற வகையில் எங்களை வெளிநாடுகள் அழைக்கும் போது நாங்கள் அங்கு சென்று தமிழர்களின் அவலங்கள் பற்றி எடுத்துக் கூறவேண்டியது எங்களது கடமையாகும் அதை விடுத்து பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துக்கொண்டு இருப்பதற்கு நாங்கள் தயாராகயில்லை வாக்களித்த தமிழ் மக்களுக்கு பதில் கூறவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு எனவே கைது செய்வோம் என்ற பூச்சாண்டி வார்த்தைகளையெல்லாம் விட்டு விட்டு தெருச்சண்டியனைப் போல் கூச்சலிட்டுக் கொண்டிருக்;காமல் மீண்டும் எங்களை அமெரிக்கா அழைப்பதற்கு முன் இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றால் உடனடியாக தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வையுங்கள் என்றார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|