முள்ளிவாய்க்காலில் 'ஆட்களில்லா இடங்களில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்'?


இலங்கையில் 2009 இல் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற பகுதிகளில், இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் பல பொதுமக்களது சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.அந்தப் பகுதிகளுக்கு முழுமையாகச் சென்றுவர வசதி செய்யப்பட்டாக வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான றிச்சர்ட் ஹொவிட் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பகுதிகளில் நிலக்கண்ணிகள் இருப்பதன் காரணமாகவே அங்கு செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.இந்தப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை என்பது இன்னமும் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது.

ஆட்கள் செல்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாத பகுதிகளின் எல்லைகள் வரை செல்வதற்கு சோஷலிச யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பகுதிகளில்தான் போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டதுடன் அவர்கள் மீது விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை அரசாங்கப் படைகளின் குண்டுத்தாக்குதலும் நடத்தப்பட நேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது. இப்போதைக்கு அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்தப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் எல்லாம் ஒருவிதமான அச்ச உணர்வு மக்களின் மத்தியில் காணப்படுவதாகவும் அங்கு சென்று வந்த அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற றிச்சர்ட் ஹொவிட் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தப் பகுதிகளில் சில இடங்களில் நிலக்கண்ணிகள் இருப்பதனாலேயே மக்கள் இன்னமும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அங்கு சடலங்களோ அல்லது வேறு எதுவுமோ கிடையாது என்றும் பாதுகாப்புத்துறை பேச்சாளரான கெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக் குறித்து மிகுந்த ஆச்சர்யம் வெளியிட்ட ரம்புக்வெல்ல அவர்கள், இதுவரை காலமும் போருக்குப் பின்னர் எவரும் நிலக்கண்ணிகளால் இறக்கவில்லை என்றும், அங்கு மக்களை அனுப்புவது ஆபத்து என்றும் கூறினார்.

அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அரசாங்கம் வேறு புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளது.ஆனால், கடலில் இருந்து இந்தப் புதிய இடம் மிகவும் தொலைவில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இராணுவம் பொதுவாக நன்றாக நடக்கின்ற போதிலும், வடக்கில் அவர்கள் அளவுக்கு அதிகமாக இருக்கிறார்கள் என்றும் றிச்சர்ட் ஹொவிட் கூறியுள்ளார்.

நன்றி அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

veduthalai said...

nam tamillarka erunthal bothathu namakkul ordumai ellatha nelaiel namudiya veduthalaiyai nenaikkamudiyuma? enral ellai namudiya thysiya thalaivar vanthal mattumeai mudiyum martronru or kareyam tamil naddu tamilarkalai adimai thanathil erunthu vedivikkavendum tamil nattu veduthalai than ela veduthalai nernaikkum entha kare yathil naam onrupattu nekkavenum athrkku neraiya porul selau pannavendum nam makkal onrupttal veduthalai nechayam...........

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|