வலைப்பதிவு ஒன்றை (Blogsite) உருவாக்குவது எப்படி? (தொடர்ச்சி...)

வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவதற்கு தேவையானவை எவை?...

இவ் வலைப்பதிவிற்கான வசதியை கூகிள் வழங்குவதால் உங்களிடம் அவசியமாக ஜி- மெயில் கணக்கு ஒன்று இருக்க வேண்டும், அத்துடன் மைக்ரோ சொப்ட் வேட்டில் உள்ள அனுபவமும் போதுமானது.

மாதிரி வலைப்பதிவு ஒன்றை உருவாக்குதல்.
உங்களது இணைய ஓடியில் (web browser) உள்ள address barல் www.blogger.com என்னும் இணைய முகவரியை செலுத்தி அத்தளத்திற்கு செல்லவும். அதன்போது கீழ்வருமாறு தோற்றமளிக்கும்.


இங்கு காணப்படும் கூடுகளினுள் உங்களது பயனர் பெயரையும், நுளைவுச்சொல்லையும் உட்புகுத்தி sign in பொத்தானை அழுத்தவும். அப்போது கீழ்காட்டப்பட்டவாறு தோற்றமளிக்கும்.


இங்கு காணப்படும் கூடுகளை உங்களது வலைப்பதிவில் தெரிய வேண்டிய பெயரையும், மேலதிக தகவல்களையும் பூர்த்தி செய்து. continue பொத்தானை அழுத்தி படிமுறை இரண்டிற்கு செல்லவும். அப்போது பின்வருமாறு தோற்றமளிக்கும்.


இங்கு நீங்கள் உங்களது profile ஐ மாற்றியமைத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து படிமுறை மூன்றிற்கு செல்வதற்கு create your blog now எனும் பொத்தானை அழுத்தவும். அழுத்திய பின் கீழே காட்டப்பட்டுள்ளவாறு தோற்றமளிக்கும்.


இங்கு வலைப்பதிவிற்குரிய தலைப்பை பூர்த்தி செய்வதுடன், நீங்கள் தெரிவு செய்த url பெயரையும் பூர்த்தி செய்து அதை பயன்படுத்த முடியுமா? என்பதனையும் பரிசோதனை செய்த பின், continue பொத்தானை அழுத்தவும்.


இங்கு உங்களது வலைப்பதிவு எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும் என்பதனை தெரிவு செய்து continue பொத்தானை அழுத்தி அடுத்த படிமுறைக்கு செல்லவும்.



இங்கு start blogging என்பதனை தெரிவு செய்து தோன்றும் பகுதியில் உங்களது முதல் பதிவை மேற்கொள்ள முடியும். அல்லது வலைப்பதிவில் உங்களது தேவைக்கு ஏற்றால் போல் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.


வலைப்பதிவு ஒன்றில் காணப்படும் பகுதிகள் எவை?


தொடரும்...

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா!

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|