பொது மக்களின் சொத்துக்களை பொதுமக்களுக்கே பேரம் பேசி விற்பனைசெய்யும் இராணுவத்தினர்..!

மாங்குளப்பகுதியில் யுத்தகாலப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2ஏக்கர் காணியில் இராணுவத்தினரின் களஞ்சியசாலை அமைந்துள்ளது.  இக் களஞ்சியசாலையில் யுத்தகாலப்பகுதியில் பொதுமக்கள் விட்டுவிட்டு சென்ற வீட்டுதளபாடங்கள் வீட்டு ஜன்னல்கள், கதவுகள், என்று அனைத்து விதமான தளபாடங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் அனைத்து விதமான உடமைகளும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.


தற்போது மாங்குளம் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் களஞ்சியம் அமைந்திருந்த பகுதியில் ஒரு ஏக்கர் காணியைமட்டும் உரிமையாளருக்கு வளங்கப்பட்டு மீதமாக உள்ள காணியில் குறித்த களஞ்சிய சாலை அமைந்துள்ளது .


இக் களஞ்சிய சாலையை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் களஞ்சிய சாலையில் உள்ள பொது மக்களின் செத்துக்கள் குறிப்பாக பெறுமதி மிக்க ஜன்னல்கள், கதவு, வீட்டு தளபாடங்கள் போன்ற 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இரவு நேரங்களில் தமது வாகனங்களில் ஏற்றி குறித்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கே விற்பனை செய்துவருகின்றனர்.


இவ்வாறு பொது மக்களின் சொத்துக்களை பொதுமக்களுக்கே விற்பனை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. என்று கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


வன்னியில் இருந்து வன்னி மீடியா செய்தியாளர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|