அமெரிக்காவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து (காணொளி, பட இணைப்பு )

அமெரிக்காவின் Reno, Nevada வில் நடைபெற்ற தேசிய விமானமோட்டல் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்ட சாகச விமானமொன்று விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 9 பேர் பலியானதுடன் 54 பேர் காயமடைந்துள்ளனர். 1940 ஆம் ஆண்டுகாலப்பகுதிக்குரிய மீள்வடிவமைக்கப்பட்ட P51 Mustang எனும் சாகச விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

அந்த விமானத்தையோட்டிய JIMMY lEEWARD எனும்  74 வயதுடைய விமானியும் மேலும் எண்மருமே இதில் கொல்லப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே  விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.







இந்தக்கொடூர விபத்தை நேரில் கண்டவர்கள் இது தொடர்பாக  விபரிக்கையில், நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த திசையை நோக்கியே விமானம் வீழ்ந்து கொண்டிருந்ததாகவும் தாம் அனைவரும் கொல்லப்படப்போகிறோம் என்பது உறுதியாகி விட்டதாகவும் தாங்கள்  நினைத்தோம்.

எனினும் விமானி தனது சாதுரியத்தினால் விமானத்தை மக்கள் கூடியிருந்த திசையிலிருந்து வேறு திசைக்கு திருப்பி விட்டார்.இதனால் 200 அல்லது 300 பேருடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன எனக்கூறியுள்ளனர். கொல்லப்பட்ட விமானியை மக்கள் சாதனையாளர் என்றே வர்ணிக்கின்றனர்.

இந்த விபத்தினைத்தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் இந்தவகையிலான ஒரேயொரு விமான சாகச நிகழ்வான இதனை தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

எனினும் இந்த போட்டி நிகழ்வின் மூலம் பல மில்லியன் டாலர் வருமானம் எட்டப்படுவதாகவும் விமானிகளுக்காக பெருமளவு ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|