ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எடையுடன் மெகா சைஸ் ஆண் குழந்தை பிறந்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹெரால்டு சன் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் அமந்தாபுக்கர் (36). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பிணியாக இருந்த இவர் மெல்போர்ன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திறகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதியன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவித்த குழந்தையை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக பிறந்த குழந்தை சராசரியாக 3 கிலோ வரை இருக்கும் .ஆனால் அமந்தாபுக்கருக்கு பிறந்த குழந்தை 5.75 கிலோ எடையுடன் பிறந்தது. இது தொடர்பாக நியூஸ்.காம் எனும் இணையதளத்தில் பிற்நத அந்த ஆண்குழந்தை 4 வயது குழந்தையைப்போல் இருந்ததாகவும், சிசேரியன் முறையில் பிறந்த இந்த குழந்தை பிறந்த போது 5.19 கிலோ இருந்தது. தற்போது 6 கிலோ வரை உள்ளது. துவக்கத்தில் மூச்சுவிடசிரமப்பட்டது. பிறகு அந்த குழந்தையின் ரத்த அழுத்தம் , சர்க்கரை பரிசோதிக்கப்பட்டபின் தற்போது நலமாக உள்ளது.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. பிறந்த ஆண் குழந்தைக்கு ஜாஸ்பர்லூகாஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த மெகா சைஸ் ஆண் குழந்தையை மருத்துவமனையில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதால் ஸ்டாராக பிரபலமடைந்துள்ளது. குழந்தையின் தாயும் இவ்வளவு பெரிய குழந்தை பிறந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment