அமெரிக்க விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம். உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே அதற்கு ஏறுமுகம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில் விற்று ஏகப்பட்ட லாபம். ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத் தொட்டுள்ளது. ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட். அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment