இலங்கையில் இடம்பெறும் கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் ஏனைய குற்றச் செஙல்களின் பின்னணியில் அரச படையினரும் புலனாய்வுப் பிரிவினருமே இருக்கின்றனர் என்பதை அரச சார்பற்ற நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் துஸ்பிரயோகம் தொடர்பிலான சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை குறித்து ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் மனித உரிமை தொடர்பில் சாட்சியமளிப்பவர்களுக்கான சட்டங்கள் மறுகக்க விளைவை கொடுத்துள்ளளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதே வேளை இலங்கையில் போர் முடிவடைந்த போதும் அங்கு படையினராலும் புலயாய்வுத் தரப்பினாலும் சித்திரவதைகள் உட்பட குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குழு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் அரசு இவற்றைக் கண்டுபிடித்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அந்தக் குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகள் தொடர்ந்தும் குற்றங்களுக்கு தூண்டப்படகின்றனர்- என்று சித்திர வதைகளுக்கு எதிரான குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment