இலங்கையில், பல்வேறு இணையதளங்கள் அரசால் முடக்கப்பட்டது குறித்து, கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.இலங்கை அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் குறித்து, விமர்சித்து வந்த ஸ்ரீலங்கா மிரர்.காம் உள்ளிட்ட ஐந்து இணையதளங்களை முடக்கியதாக, நேற்று முன்தினம் அரசு அறிவித்தது. அதோடு, இனி அனைத்து இணையதளங்களும், அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.இது, இலங்கையில் பத்திரிகை உலகின் சுதந்திரத்தை முடக்கும் முயற்சி என, கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அரசு குறித்த விமர்சனங்களை, சத்தம் இல்லாமல் ஒடுக்க, அரசு நினைப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.இது குறித்து, கெஹிலிய ரம்புக்வெல்ல கூறுகையில், "அந்த இணையதளங்கள் குறித்து, நிறைய புகார்கள் வந்தன. அவற்றில், ஒரு தரப்பு கருத்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.பிற கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றில் மக்கள் எங்கிருந்து தகவல் தருகின்றனர், எங்கிருந்து செயல்படுகின்றனர் என்பதை, அனைவரும் அறிந்து கொள்ள விரும்புகிறோம். இது, பத்திரிகை சுதந்திரத்தை முடக்குவதல்ல. பதிவு செய்யச் சொல்வது தணிக்கையல்ல' என்றார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment