அமெரிக்க நியூயோர்க் நகரில் இருந்து 17 மைல் தொலைவில் நயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு நகரமே "எருமை நகரமாகும்". இது கனடாவை அண்மித்த பகுதியாகும். வராலாற்றுச் சிறப்பு எதுவும் இல்லாவிட்டாலும் இன் நகருக்கு என்று தனிச் சிறப்பு ஒன்று இருக்கிறது. அது அங்குள்ள எருமைகளின் எண்ணிக்கையாகும். 8.1 மில்லியன் மக்கள் வாழும் இடத்தில் சுமார் 261 310 எருமைகளும் வாழ்வதால் தான் இந் நகரை எருமை நகரம் என்று அழைப்பார்களாம். இப்படிச் சிறப்பு மிக்க நகரில் நாடு கடந்த அரசின் 3வது அமர்வு நடைபெறவுள்ளது. நாடு கடந்த அரசின் 1ம் அமர்வு பிலடோப்பிய மாகாணத்தில் நடைபெற்றது. இம் மாகாணமே அமெரிக்க சட்ட வரையறைகளை மேற்கொள்ளும் மாகாணமாகும்.
பின்னர் இடம்பெற்ற 2ம் அமர்வு ஐ.நா இருக்கும் இடத்துக்கு அருகாமையில் நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போது எருமை நகரில் 3ம் அமர்வு நடைபெற்றவுள்ளது. இதைவைத்தே நீங்கள் பார்க்கலாம் அமர்வுகள் எங்கே நோக்கிப் போகின்றது என்று. இந்த அமர்வு எமது போராட்டத்தின் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வுகளில் வேற்றின மக்களும் நாடு கடந்த அரசின் நட்பு நாடுகளும் பார்வையாளராகக் கலந்துகொள்ளவிருப்பதும் பெரும் விடையமாகும். இதில் தென்சூடான் பிரதிநிதிகள் பங்கேற்ப்பார்களா என்று நா.க.உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது தென்சூடானா... அவர்கள் சிலவேளை வரலாம் வராமலும் போகலாம் ஆனால் பிற நாட்டு ரஜதந்திரிகள் வருகிறார்கள் எனப் பதிலளிக்கப்பட்டது.
எந்த நாட்டுப் பிரதிநிதிகள் பங்குகொள்கிறார்கள் என்பது திருவனந்தபுரம் பத்மானந்த சுவாமி மர்ம கோயில் அறைகள் போல ரகசியமாக உள்ளதாம். ஏன் எனில் அதனைச் சொன்னால் இலங்கை அரசு அவர்களைத் தடுத்து விடுமாம். (அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது). அத்தோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுவும், இன ஒழிப்புத் தொடர்பாக ஆய்வு செய்வதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் சமவேளையில் கூடவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இவ்விரு குழுவும் மிகவும் சக்த்திவாய்ந்தது. இவர்கள் தனியாகச் செயல்பட்டாலே இலங்கை அரசால் தாங்க முடியாது என்ற நிலை இருக்கும்போது இவர்கள் இருவரும் ஒன்றாகக் கூடவுள்ளனர் என்ற அதிர்ச்சிச் செய்தி இலங்கை அரசுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக அமையும் என யாரும் எண்ணவேண்டாம் ! இவ்வளவு காலம் இவர்கள் என்ன செய்தார்களோ அதனைத் தான் இனியும் செய்வார்கள் என்பதனை இலங்கை அரசு ஏற்கனவே கணக்குப் போட்டு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில் நடைபெறவிருக்கும் அமர்வுகளினூடாக மக்களுக்கு என்ன சொல்லப்படப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் அமர்வுகள் இருப்பதாகவும் பலவிடையங்கள் ஆரயப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவை மனிதர்களின் காதுகளுக்கு கேட்கிறதோ என்னமோ தெரியவில்லை ஆனால் அங்குள்ள 2 லட்சத்தி அறுபத்தி ஓராயிரத்தி 310 அதுகளுக்கு நல்லாக் கேட்க்கும்.
நன்றி அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment