இவ்வாண்டில் 300 மில்லியன் மொபைல் போன்களை விற்று தள்ளிய Samsung நிறுவனம்.


இந்த வருடத்திற்கான Samsung நிறுவனத்தின் இலக்கு 300 மில்லியன் மொபைல் போன்கள். Samsung மொபைல்நிறுவனம் இவ்வாண்டு 300 மில்லியன் மொபைல் போன்களை விற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுவே இதுவரை காலமும் ஒரு ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அதிகூடிய மொபைல் போன்களின் எண்ணிக்கையாகும்.

கடந்த 2010ம் வருடத்தில் 280மில்லியன் மொபைல் போன்களை விற்று சாதனை படைத்திருக்கும் அதேவேளை இவ்வாண்டில் இவ்வெண்ணிக்கையை 300 மில்லியன்களாக உயர்த்தியுள்ளது இவ்நிறுவனம்.

Samsungநிறுவனத்தின் தலைமை அதிகாரியான JK Shin கருத்துதெரிவிக்கையில்
இவ் வெற்றியை 2012இலும் முனனெடுத்துச் செல்லப்போவதாகவும் புதிதாக வெளியிட்ட Galaxy S மற்றும் Galaxy S IIஇன் 10மில்லியனுக்கும் மேற்பட்ட விற்பனையே இவ்வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|