மகிந்தரால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் அமெரிக்க தூதரகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பியுள்ள நிலையில் அவ்வறிக்கையை முழுமையாக வாசித்த அமெரிக்க அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் கடந்த வாரம் இவ்வறிக்கையைப் பெற்றுகொண்ட போதும் உடனடியாக எக் கருத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. ஆனால் தற்போது அவர்கள் இந்த அறிக்கை தொடர்பாக தமது அதிருப்த்தியை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் ஊடக சுதந்திரம் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்திரும் ஒரு கருத்தை மட்டும் வரவேற்றிருக்கும் அமெரிக்க அதிகாரிகள் மனித உரிமை மீறல் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு எவ்வித பரிந்துரைகளையும் கொடுக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இறுதி யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் நல்லிணக்க ஆணைக்குழு இது தொடர்பாக திருப்திகரமான எந்தப் பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது என அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கையை ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிராகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் இதனை நிராகரிக்கும் நிலை தோன்றலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. இவ்வறிக்கையின் ஒரு பதிப்பு ஐ.நாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா தொடர்ந்தும் மெளனம் சாதித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
நன்றி அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment