என்னங்க தலைப்பை பார்த்ததுமே குழம்பிட்டிங்களா? ஆமா இது ஒரு உண்மைக் கதை. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்மணி Maria Assunta. இவங்களுக்குன்ன சொந்தம்ன்னு சொல்லிகிறதுக்கு யாருமில்ல. இவரை தனியா தவிக்க விட்டு இவரோட கணவரும் சாமிகிட்ட போய்ட்டாரு.
இப்படி இருக்கிறப்போ தன்னோட நிலைமைய யோசிச்சிகிடே ஒரு நாள் ரோம் நகர தெருவில நடந்துகிட்டு இருக்கிறசமயம் தெருவோரமா ஒரு பூனைக்குட்டியை பார்த்ங்க. உடனே அவங்களுக்கு அதை ரொம்ப பிடிச்சுப்போக தன் துணைக்கு அதை வீட்டுக்கு எடுத்துச்சென்று வளர்க்க ஆரம்பிச்சாங்க.இப்படியே 4வருஷம் முடிஞ்சிருச்சு.
இப்படி இருக்கிற நேரத்தில இரண்டு வாரத்திற்கு முன்னாடி தன்னோட 94வது வயதில் மரியா இயற்கை எய்திட்டாங்க. அதோட அவங்க சும்மா போகல போவற்கு முதல் தன்னோட 13 மில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்துக்கள் எல்லாம் Tommaso க்குதான் சொந்தம் என்றும் Tommasoக்கு அப்புறம் எல்லா சொத்துக்களும் மிருகங்களை பாதுகாக்கும் சங்கங்களுக்கு வழங்கவும் என்று உயில் எழுதி வைச்சு இருந்தாங்க. இப்ப என்ன செல்ல பூனைக்குட்டி தோமஸ் ராஜ மரியதையோட ஒய்யாரமா வழ்ராரு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment