வீரத்தமிழன் முத்துக்குமாரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்


சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புப் போரினை நிறுத்த வலியுறுத்தி தமிழத்தின் தலைநகரில் தன்னை எரியூட்டி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  ஈழத்தமிழினத்தின் துயர்துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி ஈகைச்சாவடைந்த இந்த வீரத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

"இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்” இதுதான் முத்துக்குமார் இறுதியாக உரைத்த வார்த்தைகள்.



நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|