சில நாட்களுக்கு முன் சர்வதேச பனிவிழா ஹார்பினில் ஆரம்பமானது. ஹார்பின் சீனாவின் ஹெய்லோன்ங்ஜியானங் மாநிலத்தின் தலைநகராகும்.அத்துடன் இது பனி நாகரிகம் நிலவிய ஓர் இடமாகவும் கருதப்படுகிறது. இந் நகரம் சீனாவில் வடகிழக்கு பகுதியில் இருப்பதால் இது சைபீரியாவில் இருந்து வரும் பனிக்காற்றின் மூலம் பயனடைகிறது. இங்கு கோடைகால சராசரி வெப்பநிலையாக 21.1செல்சியஸ் வெப்பநிலையும் குளிர்காலத்தில் மறை 16.8 செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. சில சமயங்களில் இவ் வெப்பநிலையானது மறை 38.1 செல்சியஸாக குறையும் சந்தர்ப்பங்களும் உண்டு.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment