இந்நிலையில், சீனாவில் இறந்தவர்களின் உடலை அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் அப்படியே உடலை வெட்டி கழுகுகளுக்கு இரையாக்கி இறுதி சடங்கு நடத்தும் பயங்கரம் நடக்கிறது. இதை ‘ஸ்கை பரியல்’ அதாவது, ஆகாய புதைப்பு என்கிறார்கள்.சீனாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. உடலை எரிக்க மரங்கள் கிடைக்காததாலும், புதைப்பதற்காக நிலத்தை தோண்டுவது மலைப்பாங்கான பகுதிகளில் கடினம் என்பதாலும் ‘ஆகாய புதைப்பு’ முறையை பின்பற்றி வந்தனர். இது மிகவும் அருவருப்பானது, சுகாதாரமற்றது என்பதால் 1960&களில் சீன அரசு இதற்கு தடை விதித்தது. ஆனால், 1980&களில் இருந்து சீனாவின் சில இடங்களில் மட்டும் இதை புத்தமத இறுதி சடங்கு என்ற பெயரில் மீண்டும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
திபெத்திலும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலும் ‘ஆகாய புதைப்பு’ அதிகளவில் நடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம், மயானம் போல உள்ளது. இறந்தவர்களின் உடல் துணியால் கட்டப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறது. உடலுக்கு புத்தமத பிட்சு ஒருவர் முதலில் வழிபாடு செய்கிறார். அதன் பின்னர், ‘ரோக்யபாஸ்’ என்பவர் வெட்டும் சடங்கை செய்கிறார். உடலை ஆங்காங்கே கத்தியால் கிழித்து கூறு போடுகிறார். பின்னர் உடலை அங்கேயே வீசிவிடுகின்றனர். இதற்காகவே காத்திருக்கும் ராட்சத கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் ஆகியவை கூட்டம் கூட்டமாக குவிந்து உடல்களை கிழித்து தின்கின்றன. இது அடிக்கடி நடக்கும் காட்சி என்பதால் அப்பகுதியினருக்கு பழகிவிட்டது. ஆனால், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
நன்றி-புதிய உலகம் .
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment