ஆயிரம் பேருக்கு மேல் ஒன்றாகத் திரண்டு புகைப்படக்காரர் ஒருவருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார்கள். இந்தச் சாதனை இஸ்ரேல் மக்களால் டெட் சீ எனப்படும் உப்பு அதிகமுள்ள கடலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க புகைப்படக் காரர் ஒருவரின் கனவு நனவாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் ஸ்பென்சர் டுனிக். ஏராளமான மக்களை நிர்வாணமாக நிற்க வைத்து பல கோணங்களில் புகைப்படம் எடுப்பது இவருக்கு பொழுதுபோக்கு.இந்த கலைச் சேவையை 1992-ம் ஆண்டு முதல் செய்து வருகிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரியா மக்களை இப்படி படம் பிடித்திருக்கிறார்.மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் 2007-ல் 18 ஆயிரம் பேரை ‘பிறந்தமேனியாக’ நிற்க வைத்து சாதனை படைத்தார். ‘இது சட்ட விரோதம்’ என்று கூறி அமெரிக்காவில் இதுவரை 7 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற இடைஞ்சல்கள் அவ்வப்போது வந்து போனாலும், ‘நிர்வாண க்ளிக்’கை மட்டும் நிறுத்தவில்லை.
சமீபத்தில் இவருக்கு போஸ் கொடுத்தது இஸ்ரேல் மக்கள். ‘டெட் ஸீ’ எனப்படும் உப்பு ஏரியில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
18 வயது இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் 77 வயது தாத்தா, பாட்டி வரை மொத்தம் 1000 பேர் பங்கேற்று ஏரியில் கால் நீட்டி படுத்து போஸ் கொடுத்தனர்.
நிர்வாணம் என்பது இயற்கை அழகு. அதை வெளிப்படுத்துவதே என் நோக்கம். ஆபாசமாக படமெடுப்பது அல்ல என்கிறார் டுனிக்.
என்றாலும் இவரது வாதத்தினை சமூகத்தில் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொள்வதாக இல்லை... இவர் மீது சிலர் கொலை வெறியில் அலைவதாக கேள்வி...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment