உலகில் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலங்களுக்குள் ஒன்றாக விளங்குவது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரமாகும். சுமார் 1,031 அடி உயரம்கொண்ட இந்தக் கோபுரத்தைப் பார்வையிட வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். கடந்த வருடம் ஜூலை மாதம் இக் கோபுரம் மீது இடி தாக்கியது. அல்லது இடி தாக்கும்போது ஒருவரால் படம்பிடிக்கப்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக அக்கோபுரத்தில் இடி தாக்கிய மட்டத்தில் எவரும் இருக்கவில்லை. மாறாக அடுத்த மட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் இருந்திருக்கிறார்கள். பரிஸ் நகரில் சூழவுள்ள பலர் இச் சம்பவதை நேரடியாகப் பார்த்தாலும் அவர்களால் அதனைப் படம் எடுக்க முடியவில்லை. காரணம் ஒரு கணப் பொழுதில் இடி தாக்கி மறைந்தது.
ஆனால் அதனை ஒரு நபர் அப்படியே படம்பிடித்துள்ளார். இக்கோபுரம் மீது இடி தாக்கி (அதாவது மின்சாரம்) பின்னர் இடிதாங்கியினூடாக இந்த மின்சாரம் பூமிக்கு அடியே பாச்சப்பட்டிருக்கிறது. இதனால் இக் கோபுரம் எச்சேதமும் இன்றி தப்பியுள்ளது என்கிறார்கள். சமீபத்தில் வெளியான இப் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது.
நன்றி-அதிர்வு இணையம்

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment