சில நாடுகள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் உலக நாடுகள், ஈழக் கோட்பாட்டாளர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்தும் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
வெளிச் சக்திகளின் அழுத்தங்கள் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் சர்வதேச சமூகம் தொனிப்பொருளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து சில நாடுகள் பின்பற்றும் கொள்கைகள் ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் புலம்பெயர் மக்களை தனிமைப்படுத்த வேண்டுமென அரசாங்கம் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment