யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் நெகிழ்வுப் போக்கைப் பின்பற்றும் என்ற கருத்துக்களில் உண்மையில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். படைத்தரப்பைச் சேர்ந்த எவரேனும் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்பட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment