சினிமாவில் தற்காப்பு கலை சண்டைக்காட்சிகளின் மூலம் உலக புகழ் பெற்று மறைந்த புரூஸ் லீ பயன்படுத்திய 13 பொருட்கள் கொங்காங்கில் ஏலம் விடப்பட்டன. இந்த பொருட்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சேகரித்து வைத்திருந்தார். ஏலம் விடப்பட்ட பொருட்களில், புரூஸ் லீ, கடந்த 1966-ம் ஆண்டு தன் நீண்டகால நண்பர் டாகி கிமுராவுக்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கடிதம் மட்டுமே ரூ-17 லட்சத்துக்கு ஏலம் போனதாக தெரிகிறது.
இது தவிர, 'கேம் ஆப் டெத்' என்ற படத்தில் புரூஸ் லீ அணிந்து நடித்த மிருகங்களின் ரோமத்தால் ஆன கோட், புரூஸ் லீயின் குங்பூ பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டைகள், புரூஸ் லீ எழுதிய கராத்தே தொடர்பான புத்தகம் ஆகியவையும் ஏலம் விடப்பட்ட பொருட்களில் அடங்கும். மொத்தத்தில், இந்த ஏலத்தின் மூலம் ரூ-50 லட்சத்துக்கு மேல் கிடைத்ததாக தெரிகிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment