இன்றைய நவீன உலகின் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக எல்லாத்துறைகளும் இலத்திரனியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானதொன்றாக இணையத்தளங்கள் காணப்படுகின்றன. இவ் இணையத்தளங்கள் பல்வேறுபட்ட தொடர்பாடல், தகவல் பரிமாற்றத்திற்கு கைகொடுக்கின்றது. அதனால் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பொதுவான அல்லது தனிப்பட்ட இணையத்தளத்தை உருவாக்க விரும்புகின்றனர். இவ் இணையத்தளங்களை வலைத்தளம், வலைப்பதிவு என நாம் இரு வகைப்படுத்தலாம்.
ஆனால் இணையத்தளங்கள் பொதுவாக இலவசமாக கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் நாம் அதன் முழுமையான பயன்களையும் பெறமுடியாது. இக்குறையை ஓரளவேனும் திருப்திப்டுத்த வலைப்பதிவு கைகொடுக்கின்றது.
வலைத்தளத்திற்கும் வலைப்பதிவுக்கும் இடையிலான வேறுபாடுகள்.
வலைத்தளத்திற்கும் வலைப்பதிவுக்கும் இடையிலான வேறுபாடுகள்.
1.நிறுவனங்கள் வலைப்பதிவுகளை வைத்திருப்பதற்கான இடவசதியையும் வார்ப்புருக்களையும் மின்னஞ்சல் போன்று இலவசமாகவே வழங்குவதால், வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்தவேண்டியதில்லை.
2.வலைப்பதிவுகள் செய்தியோடையைப் பயன்படுத்தி பெரும் சமுதாயமாக திரட்டி ஒன்றினைச்சுற்றி உருவாகிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
3.வலைப்பதிவுகளில், புதிய வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் இலகுவானது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உள்ளிட்டுவிட்டு இலகுவாக ஒரு விசை மூலம் சமர்ப்பித்துவிட்டால் தானாக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.
வலைத்தளம் ஒன்றின் இயல்புகள்:
1. வாசகர் ஊடாட்டம்
தொழிநுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும்.
2.அடிக்கடி இற்றைப்படுத்தப்படல்
பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன.
3.செய்தியோடை வசதி
வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப்பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக்கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம். இச்செய்தியோடை வசதியே, வலைப்பதிவுத் திரட்டிகளையும், வலைப்பதிவர் சமுதாயங்களையும் சாத்தியப்படுத்தியுள்ளது. போன்றவற்றை குறிப்பிடலாம்.
வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவதற்கு தேவையானவை எவை?...
வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவதற்கு தேவையானவை எவை?...
தொடரும்...
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
1 comments:
Rss Feed என்றால் என்ன?
Post a Comment